கனடாவின் புதிய ஆளுநராக முன்னாள் விண்வெளி வீரர்

Report
13Shares

கனடாவின் புதிய ஆளுநராக முன்னாள் விண்வெளி வீரர் ஜூலி பெயட்டின் நியமிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார்.

இவ்வாண்டு இறுதியில் ஆளுநராக பதவியேற்கவுள்ள அவர், கனடாவின் நான்காவது பெண் ஆளுநர் நாயகமாக திகழ்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடியர் ஒருவருக்கான உண்மையான பண்புகளைக் கொண்டுள்ள ஜூலி பெயட்டினும், அவரது பொதுச் சேவைகளும், சந்தேகத்திற்கிடமின்றி அவரை இந்த பதவிக்கு தகுதியுடையவர் ஆக்கியுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

தற்போதய ஆளுநர் நாயகத்தின் பதவிக்காலம் கடந்த 2015ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்த போதிலும், முன்னைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரினால் அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. அதன்படி அவரது பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே ஜூலி நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1359 total views