வட அமெரிக்க வர்த்தகத்தில் அரசியல் ரீதியிலான குறுக்குவழிகளை தவிர்க்கவும்: பிரதமர் ஜஸ்ரின்

Report
10Shares

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான, 23 ஆண்டுகள் பழமையான வட அமெரிக்க தடையற்றற வர்த்தக உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவரும் நிலையில், அதில் அரசியல் ரீதியிலான குறுக்குவழிகளை முயற்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

றோட் ஐலன்டில் நடைபெற்ற அமெரிக்க ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அரசியல் ரீதியிலான கவர்ச்சிகளை காட்டி, இந்த வர்த்தக நடவடிக்கைகளில் குறுக்கு வழிகளை ஏற்படுத்த முயற்சிக்காது இருப்பதே, இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்வதற்கு சான்றாக அமையும்.

அதிகமான வர்த்தக தடைகள், அரசாங்க நடவடிக்கைகளில் தனியாரின் அதிகரித்த தலையீடுகள் போன்றன, நீண்டகால ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, குறுங்கால ஆரோக்கியத்துக்கு கூட நல்லதல்ல அவ்வாறான கொள்கைகள் வளர்ச்சியை கொன்றுவிடும்.

ஒருவருக்கு ஒருவர் போட்டியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இறுதியில் இரண்டு தரப்புக்குமே பாதகமானதாகவே முடியும்” என கூறியுள்ளார்.

1243 total views