கனடாவின் ஆளில்லா விமான நடவடிக்கையில் தாமதம்

Report
13Shares

கனேடிய போக்குவரத்து திணைக்களத்தினால் ஆட்டிக் பிராந்தியம் மீது ஆளில்லா விமானம் மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த சுற்றுக் காவல் நடவடிக்கை, ஆயுத கட்டுப்பாட்டுச் சட்டங்கள் காரணமாக இரண்டு ஆண்டுகள் தாமதத்தினை எதிர்நோக்கியுள்ளது.

குறித்த அந்த ஆளில்லா விமானம் மிகவும் பெரியதாக காணப்படுவதாகவும், அதனால் அது ஒருவகை ஏவுகணையாகவே வகைப்படுத்தப்படுவதாகவும், அதனால் அந்த ஆளில்லா விமானத்தினை கடுமையான ஆயுதக் கட்டுப்பாட்டுச் சடங்களின் காரணமாக தற்போதைக்கு பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆட்டிக் துருவப் பிராந்தியம் மீது இந்த விமானம் மூலம் சுற்றுக்காவல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கனேடிய போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டிருந்த திட்டத்தினை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்த திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அனுமதி இரண்டு ஆண்டுகளின் முன்னரே கிடைத்துள்ள போதிலும், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையில் குறித்த அந்த ஆளில்லா விமானத்தினை வினியோகிப்பதில் தடங்கல்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக MTCR எனப்படும் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டுச் சட்டமே இதன் வினியோகத்துக்கு தடையாக உள்ளதாகவும், இந்த தடைச் சட்டம் குறித்த இணக்கப்பாட்டில் கனடா உள்ளிட்ட 35 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

374 total views