கடற்கரை ஓரத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பல கால்நடைகள்!

Report
163Shares
advertisement

ரொறொன்ரோ-பிக்கரிங் கடற்கரையோரமாக தலையற்ற நிலையில் பல கோழிகள் மற்றும் ஆடுகள் போன்ற கால் நடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டர்ஹாம் பிராந்திய பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.

பிக்கரிங் கடற்கரை ஓரங்களில் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் சிதைந்த நிலையிலும் காணப்பட்ட இவைகளை அவ்வழியால் சென்ற ஒருவர் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பீச் பொயின்ட் புறொமெனாட் மற்றும் மேற்கு கரை புளுவாட் பகுதி நீர் நிலையில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் விசேடமாக காலை நேரங்களில் மக்கள் நடப்பது வழக்;கம்.

அதிகாரிகளிற்கு இக்காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது. குழப்பம் மிகுந்த சம்பவமாக தோன்றுகின்றதெனவும் கூறப்படுகின்றது.

கால்நடைகள் இறந்த பின்னர் தலைகள் துண்டிக்கப்பட்டனவா அல்லது அதற்கு முன்னரா என்பது தெரிய வில்லை.

இச்சம்பவம் குறித்த தடயங்களோ அல்லது சந்தேக நபர்கள் போன் தகவல்கள் எதுவும் பொலிசாருக்கு தெரியவரவில்லை. தகவல் தெரிந்தவர்கள் முன்வருவார்கள் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மிருகங்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு கடற்கரை ஓரத்தில் போடப்பட்டதற்கான உந்துதல்கள் என்ன என்பதை அறிய பொலிசார் விரும்புகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

குறிப்புகள் எதனையும் தெரிவிப்பவர்களிற்கு 2,000 டொலர்கள் வெகுமதி வழங்கப்படுமெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 1-888-579-1520 ext. 2542

advertisement

6820 total views
advertisement