கியுபெக் எல்லையில் அகதி கோரிக்கையாளர்களிற்கு இராணும் முகாம் அமைக்கின்றது!

Report
155Shares

கியுபெக்-யு.எஸ்.எல்லைக்கருகில் அதிகரித்து வரும் தஞ்சம் கோருவோரின் நெரிசலை குறைக்கும் நோக்குடன் புதன்கிழமை கனடிய இராணுவ வீரர்கள் முகாம்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

500 பேர்கள் வரையிலானவர்களிற்கு இடமளிக்க கூடியதாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 100-பணியாளர்கள் 25 கூடாரங்களை-கிட்டத்தட்ட 500-பேர்கள் வரை தங்க கூடிய-அமைக்கும் பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்குகள் அமைக்கப்படுவதுடன் வெப்பமாக்கல் மற்றும் தரைகளும் அமைக்கப்பட உள்ளன.

கோரிக்கையாளர்களிற்கு ஆர்சிஎம்பி மதிய போசன பொதிகளை வழங்கினர்.

கனடா .யு.எஸ்.எல்லையை கடந்து கியுபெக்கிற்குள் தஞ்சம் கோர வந்தவர்களில் பல நூற்று கணக்கானவர்கள் கைட்டி வம்சத்தவர்கள்.

வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மொன்றியல் ஒலிம்பிக் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமும் 250-300பேர்கள் எல்லையை கடந்து வந்து தஞ்சம் கோருகின்றனரென மொன்றியல் நகர சபை தெரிவித்துள்ளது.

பழைய றோயல் விக்டோரியா வைத்தியசாலை அகதிகளிற்காக உபயோகிக்கப்பட உள்ளது.


6418 total views