ரொறொன்ரோ பெரும்பாக நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் சாகசம்!

Report
102Shares

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் பாரிய நெடுஞ்சாலைகளில் சாகசம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய குழுவினரை அடையாளம் காட்டுமாறு ஒன்ராறியோ பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். நீண்ட வார இறுதி விடுமுறையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

நெடுஞ்சாலை 409, 401, 403, குயின் எலிசபெத் வே, டொன்வலி பாக்வே, மற்றும் கார்டினர் கடுகதி பாதை ஆகிய பரபரப்பான பாரிய நெடுஞ்சாலைகளில் பிற்பகல் 12.30 ற்கும் 2.30ற்கும் இடைப்பட்ட நேரத்தில் மோட்ட சைக்கிள்களில் பாரிய குழு ஒன்று மிக ஆபத்தான முறையில் சைக்கிள்களை செலுத்தியதாக பல முறைப்பாடுகளை பொலிசார் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெடுஞ்சாலைகளில் சைக்கிள்களை செலுததுவதும் நிறுத்துவதுமாக செயல் பட்டமை பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

சாரதிகள் ஒன்றாக அணிதிரண்டு சாகசங்களi செய்துள்ளனரென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொடூரமான முறையில் பாரிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்களை தடை செய்துள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் சாரதிகள் அனைவரும் நெடுஞ்சாலைகளில் அசையாது ஸ்தம்பித்த நிலையில் நின்று விட்டனரெனவும் புதன்கிழமை சிபி 24செய்தி சேவையில் பேசிய ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் கெரி சிமித் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிள்களை விடடு இறங்கி சகல விதமான சாகசங்களையும் வீதிகளில் நடாத்தியும் உள்ளனர்.

வாகன ஓட்டிகள் அந்த நேரத்தில் குற்றவியல் நடவடிக்கைகளை செயல் படுத்தியுள்ளனரெனவும் சிமித் தெரிவித்தார்.

சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை பகுதிகள் தெரிவிக்கப்படவில்லை.

இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் ஒன்ராறியோ மாகாண பொலிசாருடன் 416-317-8250 என்ற இலக்கத்தில் அல்லது அனாமதேயமாக 1-800-222-8477 Crime Stoppers உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

3680 total views