துருக்கி உணவக தாக்குதலில் கனேடியர்களும் உயரிழப்பு

Report
66Shares

துருக்கி புர்கினா ஃவசோ உணவகத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் இரண்டு கனேடியர்கள் உயிரிழந்துள்ளதாக கனடா உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவைச் சேர்ந்த தமி ஷென் (Tammy Chen) என்பவரும் கியூபெக்கைச் சேர்ந்த பிலெல் டிவலாஹ் (Bilel Diffalah) என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் உயிரிழப்பு நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவைச் சேர்ந்த தமி ஷென், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மாணவியாவார். இவர் கனடாவில் குயின்ஸ் மற்றும் மக்ஜில் பல்கலைக்கழகத்திலும் முன்னர் கல்விகற்றுள்ளார் என்பது அவருடைய பேஸ்புக் பக்கத்திலிருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை டிஃவல்லாஹ், யுனிடெரா திட்டத்திற்கு சுகாதார மற்றும் உயிர்பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். யுனிடெரா திட்டம் சர்வதேச ஆய்வுகள் மற்றும் ஒத்துழைப்புக்களுக்கான மொன்றியல் சார்ந்த மையம் மற்றும் கனேடிய உலக பல்கலைக்கழக சேவை மையம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் வறுமைக்கு எதிரான திட்டம் ஆகும். இத்திட்டத்தில் டிஃவல்லாஹ் பிரத்தியேக ஊழியராக பணியாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரதிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2486 total views