குடியேற்ற எதிர்ப்பு பதாதைகள் குறித்தி கியுபெக் முதல்வர் கவலை!

advertisement

குடியேற்றங்களிற்கு எதிராக அண்மையில் தோன்றிவரும் பதாதைகள் குறித்து தான் கவலை கொண்டுள்ளதாக கியுபெக் முதல்வர் பிலிப்பே குலியாட் தெரிவிக்கின்றார்.

#REMIGRATION என்ற சொல்லை தாங்கிய பல பதாதைகள் திங்கள்கிழமை வைக்கப்பட்டுள்ளன- மாகாணத்தின் தலைநகரின் பரபரப்பான பொது வழி பாதை ஒன்று உட்பட.

இது மட்டுமன்றி வலதுசாரி குழு எதிர்வரும் ஞாயிற்றுகிழமை அகதிகள் குறித்த மத்திய மற்றும் கியுபெக் அரசாங்கத்தின் அணுகு முறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் சமூகத்தின் ஒரு பகுதி மற்றும் அவர்களது கருத்து சுதந்திரம் அவர்களை பேச வைக்கின்றதெனவும் ஆனால் இது ஒரு வகை முட்டாள் தனமெனவும் கருதப்படுகின்றது. சூடான அரசியல் விவாதத்தை தூண்டியுள்ளது.

யு.எஸ்சிலிருந்து அண்மை காலங்களில் கியுபெக் வந்துள்ள பல நூற்றுக்கணக்கான அகதிகள் எண்ணிக்கை மாகாணத்தில் அரசியல் விவாதத்தை மிக சூடு பிடிக்க வைத்துள்ளது.advertisement