கனடாவில் இன்று ஒரு ஹாம்பேர்கர் 67சதம்

Report
378Shares

இன்று புதன்கிழமை தனது 50வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் கனடாவின் மக்டொனால்ட்ஸ் உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு சில விஷேட கழிவுகளை வழங்குகின்றது .

கனடாவிலுள்ள 1400க்கு மேற்பட்ட தனது உணவகங்களில் ஒரு ஹம்பேர்கரை 67சதத்திற்கு வழங்குகின்றது.

இந்தச் சலுகை காலை 11.00 ஆரம்பித்து மாலை 7.00மணி வரை தொடரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது .

ஒரு ஆளுக்கு மூன்று மாத்திரம் என்ற நிபந்தனையிலேயே வாடிக்கையாளர்கள் ஹம்பேர்கரை வாங்க முடியும் என்றும் அறிவித்துள்ளார்கள் . அமெரிக்காவுக்கு வெளியே ஒரு மக்டொனால்ட்ஸ் கிளையை நிறுவிய முதல் நாடு கனடாதான்.

1967 இல் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மன்ட் என்னுமிடத்திலேயே திறக்கப்பட்டதாக இவர்கள் இணையத்தளம் கூறுகின்றது .

தினமும் 3 மில்லியன் கனடியர்களுக்கு தாம் உணவை விற்பதாக , மக்டொனால்ட்ஸ் நிறுவனம் கூறுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

12152 total views