Sears கனடாவின் அனைத்து கடைகளும் மூடப்படுமா?

Report
168Shares

Sears கனடா அதன் அனைத்து கடைகளையும் மூடிவிட நீதிமன்றத்தின் அனுமதியை வேண்டுகின்றது. இதன் எஞ்சியிருக்கும் 130 கடைகளையும் கலைக்க முடிவு செய்துள்ளதாகவும் இதனால் கிட்டத்தட்ட 12,000பணியாளர்கள் வேலைகளை இழப்பர் எனவும் கூறப்படுகின்றது.

இந்த முடிவினால் ஏற்படும் வேலை இழப்புக்கள் மற்றும் கடைகள் மூடப்படுவது குறித்து கம்பனி ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளதாக இந்த விற்பனையாளர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நிறுவனம் அதன் கலைப்பு விற்பனையை அக்டோபர் 19ஆரம்பித்து 10-முதல் 14வாரங்கள் தொடரும் என அறிவித்துள்ளது.

5661 total views