சுத்தியலால் இரு சிறுவர்களை அடித்து கொலை செய்ய முயன்ற கனடா மனிதன்!

Report
103Shares

கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த 53-வயதுடைய மனிதனொருவர் இரண்டு சிறுவர்களை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நோர்த் யோர்க்கில் ஜேன் வீதி மற்றும் Steeles அவெனியு மேற்கில் சனிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரு சிறுவர்களும் 10-வயதிற்குட்பட்டவர்களாவர். குறிப்பிட்ட மனிதன் பிள்ளைகள் இருவருடனும் வீட்டில் இருந்ததாகவும் இருவருக்கும் சுத்தியலால் தலையில் அடித்ததாகவும் அவர்களை பின்னர் மூச்சுத்திணற செய்ததாகவும் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

பிள்ளைகள் இருவரும் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருவரும் சுகமடைந்து வருகின்றனர்.

மனிதன் மீது பிள்ளைகளை கொலை செய்ய முயன்றது, கொடுமை படுத்தியது மற்றும் மூச்சு திணற செய்தமை ஆயுதத்தால் தாக்கியமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

4505 total views