ஜஸ்ரின் ரூடோவுக்கு உற்சாக வரவேற்பு

Report
45Shares

அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மற்றும் அவரது பாரியாருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது பாரியார் உற்சாக வரவேற்பளித்தனர்.

நேற்று புதன்கிழமை வெள்ளை மாளிகையை சென்றடைந்த இவ் இருவருக்கும் டிரம்ப் மற்றும் அவரது பாரியார் கைகளை குலுக்கி கட்டியணைத்து தங்களது பாரம்பரியத்துடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மற்றும் அவரது பாரியாருக்கு விஷேடமான விருந்துபசாரமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2349 total views