தள்ளாடும் கனேடிய அரசு

Report
545Shares

கனடாவில் இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் சுகாதார மருத்துவச் செலவீனம் 242 பில்லியன் டொலர்களை எட்டும் என கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கனேடிய சுகாதார தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் ஒருவருக்கு தலா 6,604டொலர்கள் என்ற அளவில் இந்த செலவீனம் காணப்படுவதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒருவருக்கு 200 டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சுகாதார மருத்துவச் செலவீனம் சுமார் நான்கு சதவீத அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும், இந்த செலவீனமானது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.5 சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ செலவீனம் இந்த ஆண்டில் 242 பில்லியன் டொலர்களை எட்டவுள்ள நிலையில், அவற்றில் அதிக அளவாக 28.3 சதவீதம் மருத்துவமனைக்கான செலவீனங்களாக காணப்படுவதுடன், 16.4 சதவீதம் மருந்துப் பொருட்களுக்கும், 15.4 சதவீதம் மருத்துவர்களுக்கும் செலவிடப்படுவதாகவும அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

19852 total views