கல்லூரி வேலை நிறுத்தத்தால் மாணவர்கள் நிதி நெருக்கடியில்

Report
28Shares

ரொறொன்ரோ- கல்லூரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக வகுப்புக்கள் இரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் நிதி நெருக்கடிகளிற்கு ஆளாகிவருவதாக தெரிவித்த ஒன்ராறியோ அரசாங்கம் அவர்களிற்கு உதவுவதற்கு ஒரு நிதியை உருவாக்குமாறு மாகாணத்தின் கல்லூரிகளிற்கு உத்தரவு இட்டுள்ளது.

உயர்தர கல்வி அமைச்சர் டெப் மத்தியுஸ் மாணவர்கள் எதிர்பாராத செலவுகளை எவ்வாறு சமாளிப்பதென மாணவர்கள் கவலை கொண்டுள்ளனரென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தலைவர்களை சந்தித்த அமைச்சர் கூடிய விரைவில் மாணவர்களிற்கு நிதி கிடைப்பதற்கு உதவுவதாக தெரிவித்தார்.

அக்டோபர் 15ல் ஆரம்பித்த இந்த வேலை நிறுத்தத்தால் 500,000முழு நேர மற்றும் பகுதி நேர மாணவர்கள் வகுப்புக்களை இழந்துள்ளனர்.

.

1188 total views