கனடா அரசு இரத்தினபுரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டம்

Report
36Shares

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றை கனடா அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இரத்தினபுரி எலபாத்த பலாவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சுகாதார மத்திய நிலையம் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

கனடா அரசின் 10 இலட்சம் ரூபா நிதி உதவியின் கீழ் குறித்த நடமாடும் சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுகாதார மத்திய நிலையத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தாய் சேய் மருத்துவ சேவை உட்பட மருத்துவ சேவைகளை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடா அரசின் நிதியுதவியின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் மானியங்கல, ஹிதுரங்கல, ரஜவக்க ஆகிய மூன்று பிரதேசங்களிலும் 50 இலட்சம் ரூபா செலவில் புதிதாக சுகாதார மத்திய நிலையஙகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1640 total views