இலங்கையில் பெண்கள் மீதான 38வருட மதுபான தடை நீக்கம்!

Report
26Shares

கொழும்பு- பெண்கள் மதுபானம் விற்றல் வாங்குதல் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணிபுரிதல் போன்றனவற்றிற்கு கடந்த 38-வருடங்களாக இருந்து வந்த தடையை இலங்கை நீக்கியுள்ளது.

இத்தடை ரத்து அறிவிப்பு பாலின சமத்துவத்தை மீட்டெடுத்தல் மற்றும் சுற்றுலா துறையை ஊக்குவித்தல் போன்ற காரணங்களிற்காக மேற்கொள்ளப்பட்டதென நிதி அமைச்சர் மங்கள சமரவீரா கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது கடைகள் வழக்கத்தை விட ஒரு மணித்தியாலங்கள் தாமதமாக இரவு 10-மணிவரை திறந்து வைக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

1330 total views