காமன்வெல்த் நாடுகளிற்கிடையில் விசா அற்ற நகர்வு?

Report
359Shares

காமன்வெல்த் நாடுகளிற்கிடையில் ஒரு ஐரோப்பிய யூனியன் பாணியில் விசா அற்ற நகர்வு ஏற்படுத்துவது குறித்த கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 200,000 கையொப்பங்கள் இடப்பட்டுள்ளன.

கனடா, யு.கே., அவுஸ்ரேலியா மற்றும் நியு சீலந்து ஆகிய நாடுகளிற்கிடையே விசா அற்ற நகர்வு கோரப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட நாடுகளிற்கிடையில் வர்த்தக வலுப்படுத்தல் மற்றும் இராணுவ இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நகர்வு வழிவகுக்கும் என CANZUK - காமன்வெல்த் சுதந்திர இயக்க அமைப்பு- கூறுகின்றது.

மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மனு இணையத்தளத்தில் இதுவரை 200, 000கையொப்பங்களை பெற்றுள்ளது.

இந்த யோசனை நிச்சயம் ஒரு வாக்கு வெற்றி என CANZUK International தலைவர் ஜோன் பென்டர் தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு நாடுகளிற்குமிடையில் ஒரு கலாச்சார ஒற்றுமைகள் பல இருப்பதால் இந்த உடன்பாடு இலகுவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த யோசனை குறித்து யு.கே.பிரதம மந்திரி திரேசா மே மற்றும் வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் ஆகியோர் மிகவும் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் பொரிஸ் தெரிவித்தார்.

இந்த அமைப்பு 2015 ஜனவரியில் நிறுவப்பட்டது.

12464 total views