கனடா சுற்று சூழல் விடுத்துள்ள விசேட வானிலை எச்சரிக்கை!

Report
147Shares

கனடா சுற்று சூழல் ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு விசேட வானிலை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய பனிப்பொழிவு ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கலாம் என தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பணிகளிலிருந்து வீடு திரும்பும் வேளை ஏற்படலாம்.

வானிலை நிறுவனத்தின் தகவல் பிரகாரம் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சகல பகுதிகளிலும் நான்கு முதல் எட்டு சென்ரி மீற்றர்கள் அளவிலான பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 10சென்ரி மீற்றர்கள் பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று காலை பிற்பகுதியில் ஆரம்பக்கும் பனிபொழிவு மாலை வரை நீடிக்கலாம்.

மோசமான குளிர்கால போக்குவரத்து வாகனம் செலுத்துதல் போன்றவை குறித்து சாரதிகள் கவனம் செலுத்துதல் சிறந்ததெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வீதிகளின் நிலை மற்றும் தெளிவற்ற பார்வை தன்மை போன்ற நிலைமைகள் ஏற்படலாம் என விசேட வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.

வீடுகளிற்கு திரும்பும் வேளை மிக குழப்பமான வானிலை காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சனிக்கிழமை மற்றுமொரு ஐந்து சென்ரி மீற்றர்கள் பனிப்பொழிவும் ஞாயிற்றுகிழமை நான்கு முதல் எட்டு சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

4589 total views