கனடிய தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள செங்குத்தான சரிவு!

Report
0Shares

ஒட்டாவா- ஜனவரி மாதம் கனடாவில் 88,000 பேர்கள் வரை வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த செங்குத்தான சரிவு கடந்த ஒன்பது வருடங்களில் ஏற்பட்ட மோசமான சரிவென கனடா புள்ளிவிபரவியல் தெரிவித்துள்ளது.

பெரும்பாலாவை பகுதி-நேர வேலைகளாகும் என கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இன்னொரு புறம் கடந்த மாதத்தில் பொருளாதாரம் 49,000 முழு-நேர வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதென ஏஜன்சி தெரிவித்துள்ளது.

ஜனவரியில் ஒட்டு மொத்த சரிவு ஏற்பட்ட போதிலும் வேலை உருவாக்கத்தில் ஒரு வலுவான ஏற்றத்தை கனடா கொண்டுள்ளது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மேலதிகமாக 41,410 முழு-நேர வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி 2.8சதவிகித அதிகரிப்பை காட்டுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண ரீதியில் ஒன்ராறியோ மற்றும் கியுபெக் மிகப்பெரிய குறைவை கடந்த மாதம் காட்டியுள்ளதாகவும் அதே நேரம் நியு பிறவுன்ஸ்விக் மற்றும் மனிரோபா கூட நிகர இழப்புக்களை எதிர் நோக்கின எனவும் கூறப்பட்டுள்ளது.

total views