உயர்-ஆபத்தான பாலியல் குற்றவாளி சிறையில் இருந்து விடுதலை-பொலிசார் அறிவிப்பு!

Report
620Shares

45-வயதுடைய மனிதன் ஒருவருக்கு வன்முறை பாலியல் தாக்குதல் காரணமாக 2009-ல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நபர் சிறையில் இருந்து விடுதலையாக்கப்பட்டுள்ளார் என ரொறொன்ரோ பாலியல் குற்ற பகுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோசப் தயாகரன் ஜோசப் என்பவர் இரண்டு எண்ணிக்கை வன்முறை பாலியல் தாக்குதல் குற்றம் காரணமாக பலவந்தமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்த பொலிசார் உயர் ஆபத்தானவர் என்றும் தெரிவித்துள்ளனர். மீண்டும் குற்றம் செய்ய கூடியவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

விடுதலையான பின்னர் ரொறொன்ரோவில் வசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எட்டு-வருடங்கள் 10-மாதம் சிறையில் இருந்தவர்.

வாரந்தோறும் ரொறொன்ரோ பொலிசில் ஆஜராக வேண்டும், ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டாலும் தெரிய படுத்த வேண்டும் போன்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டவர்.

அனுமதியின்றி சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

26899 total views