கனடாவின் கடல்சார் மாகாணங்களில் தீவிர பனிப்புயல்!

Report
224Shares

ஹலிவக்ஸ்-நோவ ஸ்கோசியாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.பலத்த பனிப்பொழிவுடன் கூடிய தீவிர பனிப்பொழிவு கடல்சார் மாகாணங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்பகுதிகளிற்கு கனடா சுற்று சூழல் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்கிழமை பிற்பகல் சில பகுதிகளில் 25சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிப்பொழிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நோவ ஸ்கோசியாவில் வலிமையான காற்று மணித்தியாலத்திற்கு 110கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவித்திருப்பதுடன் சேதங்களும் ஏற்படலாம் என கருதப்படுகின்றது.

விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

மின்சார இழப்பிற்கு தயாராகுமாறு வாடிக்கையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

8373 total views