தாயாரை தேட உதவும் 2.5மில்லியன் டொலர்கள் லாட்டரி வெற்றி!

Report
197Shares

கனடா-நியுபவுன்லாந் மற்றும் லப்ரடோரை சேர்ந்த குடியிருப்பாளர்கள்-சுடான் தெற்கை சேர்ந்தவர்கள்- சுரண்டல் லாட்டரியில் இதுவரை கண்டிராத தொகையை வென்றுள்ளனர்.

அஞ்சலினா மற்றும் எட்வேட் லடு ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை 2.5மில்லியன் டொலர்களிற்கான காசோலையை அட்லாந்திக் லாட்டரி கூட்டுத்தாபனத்திடமிருந்து பெற்று கொண்டனர்.

அஞ்சலினா லடுவிற்கு அவரது கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை. பரிசு தொகையை மிக மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டார்.

இத்தம்பதியர் 14-வருடங்களிற்கு முன்னர் கனடா வந்துள்ளனர். சென்.ஜோன்சில் வசித்து கனடிய பிரசைகளானார்கள்.

எட்வேட் லடு சிறு குழந்தையாக இருந்த போது தாயாரை கண்டபின்னர் காணவில்லை என தெரிவித்தார். உகண்டாவில் ஏதோ ஒரு அகதி முகாமில் தாயார் இருப்பார் எனவும் அவரை தேடிக்கண்டு பிடிக்க போவதாக கூறினார். இவர்களிற்கு நான்கு பிள்ளைகள்.

அஞ்சலினா உணவகம் ஒன்றில் சமையல் காரராக பணிபுரிகின்றார். கணவர் மின் பொறியியல் பயில்கின்றார்.

இவர்களிற்கு கிடைத்த அதிஷ்டத்தை இவர்களாலேயே நம்ப முடியவில்லை.

பரிசு தொகையின் ஒரு பகுதியை பிள்ளைகளின் கல்விக்காக சேமிக்க திட்டமிட்டுள்ளனர். வீடொன்றும் கார் ஒன்றும் வாங்க எண்ணியுள்ளதோடு முக்கியமாக எட்வேட்டின் தாயாரை கண்டு பிடித்து அழைத்து வரப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

7485 total views