கனடா Starbucks Coffee பிரியர்களிற்கு சிறு ஏமாற்றம்?

Report
65Shares

திங்கள்கிழமை பிற்பகல் Starbucks-ஐ நாடும் கோப்பி பிரியர்களிற்கு சிறிது ஏமாற்றம் ஏற்பட உள்ளது.கனடா பூராகவும் அனைத்து Starbucks-ம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள 1,100 இடங்களில் அமைந்துள்ள அனைத்து பிரிவுகளையும் இன்று பிற்பகல் இனம், சார்பு மற்றும் உள் அடக்குதல் போன்றன குறித்த எதிர்ப்பு கோடல் பயிற்சி அளிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இரு கறுப்பு இனத்தவர்கள் ஸ்டார்பக்ஸ் காப்பி கடை கழிப்பறையை உபயோகிக்க அனமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சியாட்டலை சேர்ந்த கம்பனி பொது மன்னிப்பு கேட்ட சம்பவத்தை தொடரந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியா காப்பி கடையில் சம்பவம் நடந்துள்ளது.

சம்வம் பிலடெல்பியாவில் நடந்திருந்தாலும் இது கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும் என கனடா Starbucks Coffee அதிபர் மைக்கேல் கொன்வே பகிரங்க கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை பிற்பகல் 3-மணிக்கு கனடாவின் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாகும்.

கடந்த மே மாதம் 8,000 யு.எஸ்.கடைகள் இதே போன்று பயிற்சிக்காக ஒரு பிற்பகல் பூராகவும் மூடப்பட்டது.

3017 total views