விரைவில் ரொறொன்ரோவில் ஓட்டுநர் இல்லாத சிறு தூர பிரயாண வண்டி!

Report
96Shares

ரொறொன்ரோ- விரைவான போக்குவரத்துடன் சுலபமாக தொடர்பு கொள்ள முடியாத பல குடியிருப்பாளர்களிற்கு உதவும் வகையில் ஓட்டுநரில்லாத சிறு தூர பயணவண்டி விரைவில் ரொறொன்ரோவில் சேவைக்கு வர உள்ளது.

இது சம்பந்தபட்ட அறிக்கை ஒன்று அடுத்த வாரம் பொது குழு கமிட்டிக்கு செல்ல உள்ளது. இது குறித்த பைலட் திட்டமொன்று 2020-ல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் விரைவான போக்குவரத்து நிலையங்களை உபயோகிப்பதில்லை. காரணம் இவர்கள் மிக தொலைவில் வசிப்பதேயாகும்.

குறிப்பிட்ட வாகனம் ஒரே தடவையில் 8 முதல் 12 பயணிகளை உள்ளடக்க கூடியது.

TTC அல்லது Metrolinx ஊழியர் ஒருவர் குறிப்பிட்ட வண்டியில் பிரதி நிதியாக இருப்பர். வாகனங்கள் உயர்நிலை தன்னியக்கம் மூலம் தானாகவே இயங்க கூடியது.

இத்திட்டம் மிகவும் அற்புதமான ஒரு திட்டமாக அமையலாம்.

3629 total views