மேற்சட்டை இன்றி ஜாகிங் செய்த பிரதமர்!

Report
341Shares

கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ புதிய ஒன்ராறியோ முதல்வருடன் சில விடயங்கள் குறித்த சந்திப்பின் பின்னர் செர்ரி கடற்கரையில் மேற் சட்டை இன்றி ஜாகிங் செய்ததாக கூறப்படுகின்றது.

வியாழக்கிழமை பிற்பகல் இருவரும் குயின்ஸ் பார்க்கில் சந்தித்து அகதிகோரிக்கையாளர்களிற்கு ஆதரவு வழங்குவதாக புதிய முதல்வர் அறிவித்தமை குறித்தும் வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார். ;

முதல்வருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுடன் பேசிய ட்ரூடோ முதல்வர் மிக ஏற்புத்திறனுடையவர் என பிரதமர் தெரிவித்தார்.

இருவருக்கும் இடையிலான சந்திப்பு ஆக்க திறன் மிக்கதென சந்திப்பின் பின்னர் ருவிட்டர் செய்தி ஒன்றில் வோட் வர்ணித்துள்ளார்.

பின்னர் ட்ரூடோ செர்ரி கடற்கரையில் ஒரு தொப்பி மற்றும் கறுப்பு கட்டை காற்சட்டை மட்டும் அணிந்து ஜாகிங் செய்வதை கமராக்கள் பிடித்துள்ளன. பாதுகாப்பாளர்கள் போன்ற தோற்றத்துடன் பல அங்கத்தவர்கள் தொடரந்து சென்று கொண்டிருந்தனர்.

ட்ரூடோ ஜாகிங் செல்வதை படம் எடுப்பது அசாதாரணமானதல்ல அவர் வழக்கமாக சற்று கூடுதலான ஆடைகளுடன் ஜாகிங் செய்வது வழக்கம்.

வியாழக்கிழமை ஈரப்பதனுடன் கூடிய வெப்பம் 36-ஆக காணப்பட்ட நேரம் ட்ரூடோ ஜாகிங் செய்தார்.

வெள்ளிக்கிழமை ட்ரூடோ மேயர் ஜோன் ரொறியை சந்திக்கின்றார்.

11372 total views