வாகன தரிப்பிடத்தை சிதைத்தெறிந்த புல் தீ!

Report
60Shares

ஒன்ராறியோ--தரிப்பிடமாக உபயோகிக்கப்பட்ட பகுதி ஒன்றில் ஞாயிற்றுகிழமை ஆரம்பித்த புல் தீயானது நயாகரா பிரதேசத்தில் வாகன தரிப்பிடமாக உபயோகிக்கப்பட்டு வந்த பகுதியை தீக்கிரையாக்கியதில் 34-கார்கள் கருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Niagara Stone வீதியில் வார இறுதியில் இடம்பெற்ற வருடாந்த தெரு விழாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த இடம் பார்வையாளர்களிற்கு இடமளிக்க உபயோகிக்கப்பட்டது.

பிற்பகல் 3.40-மணியளவில் வாகனம் ஒன்றின் கீழ் இருந்து தீ ஆரம்பித்து 19-வாகனங்களை முற்றாகவும் மற்றும் 15-வாகனங்களி பாகங்களையும் எரித்துள்ளது.

தீயை அணைப்பதற்காக 11 டிரக் வண்டிகள் மற்றும் 40-தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இது வரையிலான கணிப்பீட்டின் பிரகாரம் 1.2 மில்லியன்கள் முதல் 1.5மில்லியன்கள் வரையிலான சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

2079 total views