NATO குறிப்பணி செயற்பாடுகளில் கலந்து கொள்ள லட்வியா செல்லும் கனடிய பிரதமர்.

Report
20Shares

வட அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பின் ஒரு பகுதியாக கனடாவின் மேலதிக துருப்புக்களை லட்வியாவில் தங்கவைத்து சாத்தியமான ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்க 2023-வரை கனடா மேலதிக துருப்புக்களை நியமிப்பதாக செவ்வாய்கிழமை உறுதியளித்துள்ளார்.

லட்வியாவின் தலைநகரமான றிகாவில் இடம்பெற்ற லட்விய பிரதம மந்திரி மரிஸ் குஞ்சின்ஸ்கிஸ்வித்துடன் இருதரப்பு சந்திப்பின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இது மட்டுமன்றி மொத்தம் 540-வீரர்கள் கொண்ட 85-துருப்புக்களையும் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

லட்வியாவில் உள்ள இராணுவ பிரிவில் அல்பானியா, சிலோவாக்கியா, சிலோவெனியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் போர்வீரர்களும் அடங்குகின்றனர்.

தனது விஜயத்தின் போது கனடிய துருப்புக்கள் மற்றும் ஏனைய நாடுகளின் வீரர்களுடனும் உரையாட உள்ளார் ட்ரூடோ.

1065 total views