கையில் கத்தியுடன் நுழைந்து தாயையும் பிறந்த குழந்தையையும் பயமுறுத்திய பெண்!

Report
100Shares

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் வீடொன்றிற்குள் அழையாத விருந்தாளியாக கத்தி ஒன்றுடன் நுழைந்து பிறந்த குழந்தையையும் தாயையும் பயமுறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தை தொடர்ந்து மற்றயவர்களையும் இப்பெண் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு காரணமாக தனது பெயரை வெளியிடாத குறிப்பிட்ட தாய் பிறந்த தனது குழந்தையுடன் தனியாக வீட்டில் இருந்த சமயம் கதவை யாரோ தட்டியுள்ளனர்.

பெண் தனது பாதுகாப்பு கமரா ஊடாக பார்த்து உடனடியாக கவலை அடைந்தார்.

விசித்திரமாக தோன்றிய பெண் கையுறை அணிந்து கையை பின்னால் வைத்திருந்ததாக கூறினார்.

கதவு பூட்டப்படாத நிலையில் இருந்தது. கதவை தட்டிய போது திறக்காது இருக்க திரும்ப திரும்ப தட்டப்பட்டு பின்னர் அப்பெண் உள்ளே நுழைந்துள்ளார்.

நுழைந்தவர் குழந்தையை பார்க்க வேண்டும் என கூறினார். தெரியாதவர்கள் வீட்டிற்குள் நுழைவது சரியானதல்ல என வீட்டில் இருந்த பெண் தெரிவித்துள்ளார்.மிகவும் அமைதியற்ற நிலையில் தோன்றிய பெண் வீட்டு கதவை மூடினார்.

கதவை நோக்கி செல்லு முன்னர் தனது காற்சட்டை பைக்குள் வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தார். இச்சந்தர்ப்பத்தில் தாய் பெண்ணை வெளியே தள்ளி விட்டு முன் கதவை மூடிவிட்டு பொலிசாரை அழைத்துள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்து கொண்ட ஆர்சிஎம்பி சந்தேகத்திற்கிடமான பெண்ணை தேட தொடங்கினர்.

புதிய தாயாருக்கு இச்சம்பவம் மிக அதிர்ச்சிகரமான ஒன்றாகும்.

தேடுதலின் பின்னர் குழந்தையையும் தாயையும் பயமுறுத்திய பெண்ணை பொலிசார் கைது செய்தனர். பெண்ணின் வயது 45.

3822 total views