தங்கைக்காக சான்ஸ் கேட்கும் கத்ரீனா கைப்

Report
4Shares

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப், தனது தங்கை இசபெல்லா கைப்பை பாலிவுட்டின் சிறந்த படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க கடுமையாக முயற்சித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கத்ரீனாவிடம், தங்கைக்காக படம் தயாரிக்கும் திட்டம் உள்ளதாக என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கத்ரீனா, என்னால் படம் எல்லாம் தயாரிக்க முடியாது. நான் தயாரிப்பாளர் இல்லை. அதே போல் என் தங்கையை யாரும் குறைத்து மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை என்றார். படம் தயாரிக்கும் திட்டமில்லை என கத்ரீனா கூறினாலும், தனது தங்கைக்காக யாஸ் ராஜ் பிலிம்ஸ் நிறுவன தலைவர் ஆதித்யா சோப்ராவிடம் பேசி வருகிறாராம். இசபெல்லாவின் ஆடிஷன் வீடியோக்களையும் அவர் போட்டு காண்பித்து வருகிறாராம்.

1141 total views