தமிழில் வாய்ப்பு தேடும் மிஸ்.கேரளா தீப்தி சதி

Report
10Shares

2012ம் ஆண்டு மிஸ்.கேரளாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவனம் பெற்றவர் தீப்தி சதி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பைதான் என்றாலும் கேரளத்து பெண்குட்டி தீப்தி. 2013ம் ஆண்டு மிஸ்.நேவி குயின் பட்டம் வென்றார், 2014ல் மிஸ்.இண்டியா பட்டத்தை சில புள்ளிகளில் தவறவிட்டார்.

நீ நா என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். லால் ஜோஸ் இயக்கிய இந்தப் படம் ஹீரோயின் சப்ஜெக்ட். இதில் நடித்தற்காக பல விருதுகளையும் பெற்றார் தீப்தி. அதன் பிறகு கன்னடம், தெலுங்கில் தயாரான ஜாகுவார் என்ற படத்தில் நடித்தார். புள்ளிக்காரன் சட்டரா, லவகுசா என்ற மலையாளப் படங்களில் நடித்தார். தற்போது பிஜாய் நம்பியார் இயக்கும் சோலோ படத்தில் நடித்து வருகிறார்.

தீப்திக்கு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. சோலோ படம் தமிழிலும் வெளிவர இருப்பதால் அதன் மூலம் தமிழுக்கு வரலாம் என்று காத்திருக்கிறார். இதற்கிடையே தமிழ் வாய்ப்புக்கு முயற்சி செய்து வருகிறார். இதற்கான தனது படங்களை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

1307 total views