ஆட்டோகிராஃப் வாங்க வந்தவர்களுக்கு அட்வைஸ் சொன்ன 'ஸ்டார் வார்ஸ்' இயக்குநர்

Report
152Shares

தன்னிடம் ஆட்டோகிராஃப் பெற வரும் ரசிகர்களிடம் வேறு உருப்படியான வேலையை பார்க்கச் சொல்லி புத்திமதி கூறியுள்ளார் ஸ்டார் வார்ஸ் படங்களை உருவாக்கிய இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ்.

ஜார்ஜ் லூகாஸ் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்களின் கையெழுத்துகளை இணையத்தில் விற்று சிலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்த நிலையில் நியூயார்க்கில் ஜார்ஜ் லூகாஸிடம் ஆட்டோகிராஃப் பெற சில ரசிகர்கள் முந்தினர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த லூகாஸ், கூடிய ரசிகர் கூட்டத்தோடு விவாதிக்க ஆரம்பித்தார்.

"ஏன் என்னிடம் பணம் இருக்கிறது, உங்களிடம் இல்லை தெரியுமா? நான் என் நேரத்தை கையெழுத்துகள் வாங்க செலவழிக்காமல் படங்கள் எடுக்க செலவழித்தேன்" என்றார். மேலும் நேர்மையான வழியில் வாழவும் அறிவுறுத்தினார்.

ரசிகர் கூட்டத்தில் ஒருவர் தனக்கு படங்கள் இயக்க வழியில்லை என்று சொன்னபோது இன்னும் கோபமடைந்த லூகாஸ், "நானும் உங்களைப் போல தான் ஆரம்பித்தேன். அப்போது என் கையிலும் எதுவும் இருக்கவில்லை" என்றார்.

4464 total views