மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி!

Report
79Shares

மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது.

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் 17 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

திராய்மடு வட்டாரத்தில் சூரியனும் திருப்பெருந்துறையில் சுயேட்சைக்குழுவும் நொச்சிமுனை வட்டாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் வெற்றிபெற்றுள்ளது.

இந்த நிலையில் அறுதிப்பெரும்பான்மையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3241 total views