சக்தியை ஓட ஓட விரட்டிய ஓவியா ரசிகர்கள்..! தலைதெறிக்க ஓடிய சக்தி..?

Report
79Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சக்தி வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வரும்போது தனக்கு ரசிகர்களின் கரவொலி விண்ணை பிளக்கும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் ரசிகர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை. அதே போல கமல் ஓவியா பெயரை சொல்லும்போதெல்லாம் எழுந்த கரவொலியை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்துதான் போனார்.

இந்த நிலையில் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக நேற்றைய தினம் சக்தி சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஓவியாவின் ரசிகர்கள் சக்தியை சூழ்ந்து கொண்டனர். ஓவியா ரசிகர்கள் சேர சேர கூட்டம் அதிகமாகி கூச்சல் எழுந்து விளம்பர பட படபிடிப்பு தடை பட்டது.

மேலும் சக்தியிடம் ஓவியா ரசிகர்கள், ஓவியாவை ஏன் அடிக்க போனீர்கள். அவரை ஏன் தனிமைப்படுத்தினீர்கள்.

அவரை போல இருக்க முடியுமா என கேட்டு துளைத்து எடுத்தனர். இதில் ஆடிப்போன சக்தி அந்த இடத்தில் இருந்து வெளியேறி காரில் ஏறி புறப்பட்டார்.

ஆனாலும் சில ஓவியா ரசிகர்கள் பைக்கில் காரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இந்த நிகழ்வு சக்தியை ரொம்வே பாதிக்க செய்து விட்டது என்றே கூறலாம்.

3389 total views