குழந்தையை கொன்று புதைத்த தம்பதிக்கு 20 ஆண்டுகள் சிறை: பிரான்ஸை உலுக்கிய வழக்கின் தீர்ப்பு

Report
17Shares

பிரான்ஸில் குழந்தையை கொன்று புதைத்த தம்பதியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு காணவில்லை என முதலில் 4 மாதங்கள் தேடப்பட்ட 5 வயது குழந்தையை பெற்றோர்களே தோட்டத்தில் புதைத்தது கண்டறியப்பட்டது.

செசில் போர்கன்(வயது 30) என்பவரின் அந்நாள் கணவர் பெர்கென் மக்கோல்ஃப்(வயது 36) என்பவருடன் இணைந்து குழந்தையை புதைத்தது தாங்கள் தான் என ஒப்புக் கொண்டதால், தம்பதியர் இருவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் குழந்தையை தாங்கள் கொலை செய்யவில்லை, வீட்டில் ஏற்பட்ட சிறு விபத்தில் குழந்தை இறந்துவிட்டதாக இருவரும் மாறி மாறி கூறியதால் வழக்கு குழப்பமான பாதியிலேயே சென்று கொண்டிருந்தது.

ஆனால் போதைப் பழக்கத்துக்கு குழந்தையின் தாய் செசில் அடிமையாக இருந்ததால் கணவருடன் இணைந்து குழந்தையை சித்ரவதை செய்திருக்க கூடும் என பொது வழக்கறிஞர் ரபேல் ஜெண்டில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றம் நேற்று(11/2/2017) வழங்கியுள்ள தீர்ப்பில், குழந்தையின் பிரேதம் கிடைக்கவில்லை. குழந்தையை பெருப்பாக கவனைத்துக் கொள்ள தவறிய பெற்றோருக்கு தான் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய குழந்தையின் தந்தையும் போர்கனின் முன்னாள் கணவருமான நிக்கோலஸ் கூறுகையில், இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

போர்கனுக்கு உரிய தண்டனை கிடைத்துள்ளது. என் குழந்தை ஃபியோனாவிற்க்கும் எனக்குமான நியாயம் கிடைத்துவிட்டதாக உணர்கிறேன். ஆனால் என் குழந்தை மீண்டும் வரப்போவதில்லை என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

1551 total views