Tourcoing நகரில் காணாமல் போன 9 வயது சிறுவன் மீட்ப்பு

Report
20Shares

Nord மாவட்டத்தின் Tourcoing நகரில் கணாமல் போன 9 வயது சிறுவன் ஒருவன், 230 கிலோமீட்டர்கள் தொலைவில், பரிசில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, கடந்த வெள்ளிகிழமை Nord மாவட்டத்தின் Tourcoing நகரில் வைத்து, Tiago Da Silva எனும் 9 வயது சிறுவன் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவாகியிருந்தது. இந்நிலையில் குறித்த சிறுவன் 230 கிலோமீட்டர்கள் தொலைவில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசின் 15 ஆம் வட்டார Pasteur தொடரூந்து நிலையத்துக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் வைத்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவத்துக்கு பின்னணியில் குற்றவியல் தடையங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை உறுதி செய்ய முடியவில்லை எனவும், குறித்த சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனைகள் அளித்ததன் பின்னரே தெரிவிக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில், ஜன்னல் வழியாக வெளியேறி வீதிக்கு வந்ததாகவும், தாயாருடன் செல்லும் வழக்கமான தொடரூந்தில் ஏறி பரிசுக்கு வந்ததாகவும் Tourcoing நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

687 total views