புதிய இணையதளம் தொடங்கினார் கமல்ஹாசன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Report
19Shares

அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே என்ற முழக்கத்துடன் புதிய இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நிலையில் தான் அரசியலுக்கு வருவது உறுதி என கடந்த நவம்பர் மாதம் உறுதி செய்திருந்தார்.

அதன்படி வருகின்ற பிப்ரவரி 21-ஆம் திகதியன்று தனது கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.

அந்த அரசியல் சுற்றுப்பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த இல்லத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மையம் என்னும் தனது பழைய இணையதளத்தை பெயர் மாற்றி ‘நாளை நமதே’ என்று புதிய இணையதளமாக தொடங்கியுள்ள கமல்ஹாசன், “கிராமியமே நம் தேசியம் என்றால் நாளை நமதே!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையதளத்தில் தன் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் இணைந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1554 total views