அந்த விடயத்தில் அமெரிக்கர்களைவிட இந்தியர்கள்தான் முன்னுக்கு நிற்கிறார்களாம்!

advertisement

உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகமான மக்கள் முகநூலில் கட்டுண்டு கிடப்பதாக அண்மைய ஆய்வொன்று கூறுகிறது.

முன்னர் அமெரிக்காவிற்கு அடுத்தபடியில் நின்ற இந்தியா இப்பொழுது அமெரிக்காவைப் பிந்தள்ளி முன்னுக்கு நிற்பதாக ஹூட்சூட் எனப்படும் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் முகநூல் பாவனையாளர்கள் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 241 மில்லியன் பேரிடமும் அடுத்த இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 240 மில்லியன் பேரிடமும் முகநூல் கணக்குகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளில் மட்டுமே உலகளாவிய ரீதியில் சுமார் கால் பங்கு பயனாளர்கள் முகநூல் வைத்திருக்கிறார்கள். இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது அமெரிக்காவை முந்தியுள்ளது.

இந்தியாவில் புதிய முகநூல் கணக்குகள் தொடங்குவது கடந்த 6 மாதங்களில் 27 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement