இந்தியர்களுக்கும் இலங்கயர்களுக்கும் இனிப்பான செய்தி; இன்றுமுதல் சேவையில்!

advertisement

இலங்கையின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தமிழ்நாடு கோயம்புத்தூர் விமான நிலையத்துக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்றிலிருந்து இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைய நாட்களில் கொழும்பில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதரபாத் ஆகிய இடங்களுக்கு இந்த விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த புதிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுதவிர இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளுக்குள் வீசா இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக, சார்க் நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டில் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

advertisement