கர்ப்பமாக வீடு திரும்பிய கடத்தப்பட்ட மாணவி

advertisement

இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி, கர்ப்பமாகத் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன் ஐஸ் கிரீம் வாங்கி வருதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால் வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

தொடர்ந்து பொலிசிடம் கேட்டு வந்த அந்தச் சிறுமியின் தந்தையிடம் பொலிசார் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர். இதையடுத்து அவர் பணம் கொடுத்து தேடிக் கண்டுபிடிக்கக் கூறியுள்ளார்.

ஆனாலும் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 10-ம் திகதி, சிறுமியின் வீட்டின் அருகில் வசித்த ஒருவன் சரணடைந்தான். அவன் மூலமாக பொலிசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியின் வீட்டருகே ஓட்டல்களில் வேலைபார்த்த 12 பேர் குடியிருந்துள்ளனர். அவர்கள்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் குற்றவாளிகளை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மட்டுமின்றி சிறுமியை தேடுவதற்கு பணம் கேட்ட பொலிசார் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

advertisement