வரதட்சணை கேட்டு அண்ணியை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்த மைத்துனன்

Report
77Shares

இந்தியாவில் நபர் ஒருவர் தனது அண்ணியை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக அடித்து உதைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. டல்ஜீத் சிங்- மீனா தம்பதிக்கு இரண்டு ஆண்டிற்கு முன் திருமணம் நடந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் குழந்தையை ஏற்காத டல்ஜீத் குடும்பத்தினர், வரதட்சணை கேட்டு மீனாவை துன்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து டல்ஜீத் சிங்- மீனா தம்பதியினர் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நண்பர்களுடன் மீனா வீட்டிற்கு சென்ற டல்ஜீத் சிங்கின் சகோதரர், வரதட்சணை கோரி மீனாவை ஹொக்கி மட்டையை கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மீனாவின் தந்தை பொலிசில் புகார் அளிக்க இரண்டு நபர்களை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1768 total views