அருணாச்சல பிரதேச பகுதிகளில் சீனா போர் பயிற்சி; எல்லையில் போர் பதற்றம்.!

Report
38Shares

இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள பூடானின் டோக்லாங் பகுதியில் அத்துமீறி சாலை அமைக்க முயன்ற சீனாவை இந்தியா தடுத்து நிறுத்தியதுடன், அப்பகுதியில் ராணுவ வீரர்களை குவித்து சீனாவை மிரளவைத்து வருகிறது.

இதற்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்தியாவை போர் மூளும் எனவும் அச்சுறுத்தியும் வருகிறது. சீன அரசின் அதிகாரபூர்வ ஊடகமும் போர் குறித்த செய்திகளை வெளியிட்டுவருகிறது.

இந்நிலையில், தற்போது அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் சீனா திடீரென போர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறது. எதிரி விமானங்களை எப்படி அழிப்பது என்பது தொடர்பான பயிற்சியையும் சீனா மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.

817 total views