நித்தியானந்தா மீதான பாலியல் வழக்குக்கு நீதி..? நீதி மன்றத்தில் நடந்தது என்ன..?

Report
98Shares

நித்தியானந்தா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யை ஆரத்தி ராவ் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று நித்தியானந்தாவிற்கு எதிராக தொடர்ந்தார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையின்போது 'தான் ஒரு ஆண்மகன் இல்லை, 5 வயது குழந்தையின் உடல்தான் தனக்கு உள்ளது' என்று தெரிவித்தார் நித்தியானந்தா.

மேலும் தன்னால் பாலியல் வன்கொடுமை செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்தை ரத்து செய்யக் கோரி இளம்பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பின்னர், இந்த வழக்கு அடுத்த மாதம் 27ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

3587 total views