ரஜினிகாந்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓவியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்..!!

advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவின் புகழ் யாரும் நினைத்து பார்த்திராத ஒன்று. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மேலும் இதற்கு முன்பு புறக்கணித்த தயாரிப்பாளர்கள் கூட பணப்பெட்டியுடன் கியூவில் நிற்கின்றனர்.

இதெல்லாம் அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவே கருதப்படுகிறது.

அனைவரும் ஓவியாவின் புகழ் பாடி வரும் நிலையில், சீனி படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வம் இதனை சரியாகப்படுத்தி கொண்டார்.

சினிமா பிஆர்ஓவாக இருந்த இவர் சீனி படத்தை தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஓவியா மற்றும் ஒரு யானைதான் ஹீரோவே.

மேலும் இந்த படத்தில் வையாபுரி, ராதாரவி முக்கி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாடல்களை நம்ம கட்டிப்புடி நாயகன் சினேகன் எழுதி உள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சீனி என்ற படத்தின் பெயரை தயாரிப்பாளர் ஓவியாவை விட்டா யாரு என மாற்றி உள்ளார்.

இதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது.

தற்போது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு அடுத்து அவரது பெயரில் அவரே நடித்து படம் வெளிவர இருக்கிறது.

advertisement