ஐ.டி.மாணவன் துடிக்கத்துடிக்க வெட்டிக்கொலை!

Report
58Shares

கடையநல்லூரில் ஐ.டி. மாணவன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் மேலக்கடையநல்லூர், சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரின் மகன் முருகன் (17). வீ.கே.புதூரில் உள்ள அரசு ஐ.டி. கல்லூரி ஒன்றில் முருகன் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்த முருகனை, நண்பர்கள் செல்போனில் அழைத்துள்ளனர்.

வீட்டை விட்டுச் சென்ற முருகன், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன முருகனின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர்மேலும், முருகனின் நண்பர்களிடையேயும் விசாரித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் யாரும் முருகன் குறித்த தகவல் தெரியவில்லை என்று அவர்களிடம் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து முருகனின் பெற்றோர், அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர்.

வீட்டருகே உள்ள குளம் ஒன்றில் சடலம் ஒன்று இருப்பதாக முருகனின் பெற்றோருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்று பார்த்த அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குளக்கரையில், தனது மகன் முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதை பார்த்த அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், முருகனின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக முருகனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முருகனின் செல்போனுக்கு வந்துள்ள கால்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

2682 total views