தனது தாய் இறந்தது தெரியாமல் அருகிலேயே 2 மணிநேரமாக படுத்து உறங்கிய சிறுவன்

Report
53Shares

ஐதரபாத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரது அருகிலேயே 5 வயது மகன் படுத்து தூங்கிய காட்சி பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சமீனா சுல்தானா என்பவல் கட்டட தொழில் வேலை செய்து வந்தார்.

சமீனாவை அவரது கணவன் அயூப் 3 வருடங்களுக்குப் முன்பே பிரிந்து விட்டார். இதனால் அவர் மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

திடீரென சமீனாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்த செய்தியை அறிந்த பிரிந்திருந்த அவரது கணவர் உஸ்மானிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் யாரும் இல்லை.

அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர் சென்றுவிட்டார். அப்போது சமீனா சுல்தானாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் மகன் சோயப் அருகிலேயே படுத்து தூங்கி உள்ளான். யாரும் எழுப்பியும் அவன் எழுந்து வர மறுத்துள்ளான்.

மேலும் அந்தச் சிறுவன் தாயுடன் 2 மணிநேரம் அப்படியே படுத்து உறங்கியுள்ளான். பின் வேறு வார்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று சமாதானப்படுத்தி, தாயின் உடலைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். பின் அவனைப் பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

2828 total views