உடற்பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

Report
54Shares

பிரித்தானியாவில் உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய ஆய்வின் மூலமே இது தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பிரித்தானியாவில் உடற்பருமன் கொண்டவர்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதுடன், கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த எண்ணிக்கை இரட்டை மடங்காக அதிகரித்துள்ளது.

தற்போது பிரித்தானியாவில் 63 சதவீதமானவர்கள் மிகவும் எடை கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

பிரித்தானிய மக்களின் ஆயுற்காலம், சுகாதார நிலைமை, ஏனைய பொது நடவடிக்கைகள் கவனத்திற்கொள்ளும்போது, அவை சராசரியாக உள்ளன. ஆனால், உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை மிக மோசமாக உள்ளது.

அதிகளவான உடற்பருமன் கொண்டவர்கள் வாழும் நாடுகளான அவுஸ்ரேலியா, பின்லாந்து, நியூஸிலாந்து, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் வரிசையில் ஆறாவது இடத்தை பிரித்தானியா பிடித்துக்கொண்டுள்ளது. ‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 total views