மன அழுத்தத்தால் மூளை கொதிக்குதா? கவலை வேண்டாம்! இந்த இடங்களில் அழுத்தினாலே போதும்

Report
344Shares

மன அழுத்தத்தைக் குறைக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் ஒன்று அக்குபிரஷர் முறை. இங்கு உடலின் எந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால், மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று பார்க்கலாமா?

காது மடல்

காது மடலில் விரலால் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவும் மூச்சை உள்ளிழுத்தவாறு அழுத்த வேண்டும். இதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வயிறு

வயிற்றுப் பகுதியில் மூச்சை உள்ளிழுத்தவாறு அழுத்தம் கொடுங்கள். இதனால் உதரவிதானம் ரிலாக்ஸ் அடைந்து, மனதை அமைதிப்படுத்தும்.

தலையின் பின்புறம்

தலையின் பின்புறத்தில் கழுத்திற்கு சற்று மேலே 20 நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மனம் ரிலாக்ஸ் அடைந்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

உள்ளங்கை

உள்ளங்கையில் கொடுக்கப்படும் 20 நிமிட அழுத்தத்தினால், மன அழுத்தம் உடனடியாக குறையும். மேலும் இந்த புள்ளி மிகவும் முக்கியமான புள்ளியாக கருதப்படுகிறது. ஏனெனில் இது கணையம், கல்லீரல் மற்றும் இதயத்துடன் தொடர்புடையது.

மார்பு

மார்பின் மையப் பகுதியில் மூன்று விரல்களால் மென்மையாக அழுத்தம் கொடுத்தவாறு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் நரம்பு மண்டலம் தளர்ந்து, உணர்ச்சி பிரச்சனைகள் மற்றும் பதட்டம் பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பாதம்

பாதத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், உடலின் ஆற்றல் நிலைப்படுத்தப்பட்டு, உடலும் மனமும் ரிலாக்ஸ் அடையும்.

கால்

காலில் மென்மையான அழுத்தம் கொடுப்பதனால், மன இறுக்கம் மற்றும் பதற்றம் உடனடியாக நீங்கும்.

கையின் வெளிப்பகுதி

கையின் வெளிப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

தோள்பட்டை

தோள்பட்டையில் அழுத்தம் கொடுப்பதன் முலமும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுபடலாம்.

முழங்கை

முழங்கையில் அழுத்தம் கொடுப்பதால் மன பதற்றம் குறையும். அதற்கு ஒரு கையில் கொடுத்த பின் அடுத்த கையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் இன்னும் வேகமாக பலன் கிடைக்கும்.

10880 total views