ஓட்டுநர் கொல்லப்பட்ட பிறகும் ஓடும் பைக்: அதிர்ச்சி வீடியோ..

Report
58Shares

பிரேசிலில் சாலையில் பைக் ஓட்டிக் கொண்டிருந்த ஒருவர், பறந்து வந்த டயர் மோதி வீசியெறியப்பட்டு கொல்லப்பட்ட பிறகும் அந்த பைக் சாலையில் ஓடும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சாலையில் அவருக்கு பின்னால் வந்த ஒருவர் அந்த வீடியோவை எடுத்துள்ளார். பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவுக்கு அருகிலுள்ள சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

வீடியோ ஆரம்பிக்கும்போது மோட்டார் பைக் ஓட்டும் அந்த நபர் மீது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு டயர் மோதுவதைக் காணலாம்.

அவர் வீசியெறியப்பட்டும் அவரது பைக் தொடர்ந்து சிறிது தூரம் ஓடி பின்னர் கீழே விழுகிறது.

டயர் விழுந்த வோல்க்ஸ்வேகன் வாகனத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதன் ஓட்டுனர் மீது கொலைக் குற்றம் சாட்டப்படலாம்.

பரிதாபமாக உயிரிழந்த அந்த 42 வயதான நபர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

3069 total views