இதை பார்த்து உலகம் சிரிக்கும்: நடன வீடியோவை வெளியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report
96Shares

ஈரான் நாட்டில் இளம்பெண் நடனம் ஆடிய வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியேற்றிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மதே ஹோஜப்ரி என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இப்படி ஒரு வீடியோவை வெளியிட்ட காரணத்தால் ஈரான் நாட்டு பொலிசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #Dancing_isn't_a_crime என்ற ஹேஷ்டேக்குடன் பெண்கள் பலரும் தங்களது வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி, நாட்டில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்கள் சுற்றத்திரியும் போது, பெண்கள் நடனமாடுவதற்காக கைது செய்யப்படுவதைக் கண்டு உலகம் சிரிக்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

3341 total views