சைகை மொழி பேசும் மனித குரங்கு

Report
22Shares

வட அமெரிக்காவின் வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று.

ஜார்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் (Yerkes National Primate Research Center) பிறந்தது சான்டென்.

சான்டெக் குறித்து 2014-ஆம் ஆண்டு ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக்கொண்ட மிகச் சில மனிதக் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று.

35 வயதை கடந்துள்ள இந்த குரங்கு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் மரணமடைந்துள்ளது

தன் கடைசி நாட்களை இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கழித்தது.

பிறருடன் மிகவும் பிணைந்திருக்கும் தன்மை கொண்ட சான்டெக் இல்லாமல் போனது தங்களுக்கு ஒரு இழப்பு என்று மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தன்னை நன்கு அறிந்தவர்களிடம் பேசுவதில் சிறப்பான வழிகளைக் கையாண்ட சான்டெக் ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை என்று கூறியுள்ளனர்.

1193 total views